திலன் துஷாரா
by CricketArchive


Player:MTT Mirando

DateLine: 25th August 2008

 

முழுப்பெயர்: மகின திலன் துஷாரா மிரான்டோ

 

பிறப்பு: 1 மார்ச் 1981. பாலபிட்டியா, இலங்கை.

 

மட்டை வீச்சு முறை: இடதுகை ஆட்டக்காரர்

 

அணியில் வீரரின் நிலை: பந்துவீச்சாளர்

 

பந்து வீச்சு முறை: இடதுகை மிதவேகப்பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: இலங்கை, கண்டுரட்டா அணி, கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப், சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப், நொண்டேஸ்கிரிப்ட் கிரிக்கெட் கிளப், சிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப்
அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: ஜூன் 27-29, 2003 அன்று இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் இடையே கிங்ஸ்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி
ஒருதினப் போட்டி: ஏப்ரல் 15, 2008 அன்று இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் இடையே க்ரோஸ் ஐஸ்லெட்டில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஆகஸ்டு 17, 2004 அன்று நொண்டேஸ்கிரிப்ட் கிரிக்கெட் கிளப் - தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் இடையே கொழும்புவில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

இலங்கை அணியின் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர். இலங்கையிலுள்ள கடற்கரை நகரமான பாலபிட்டியாவில் பிறந்து வளர்ந்தவர்.

 

1998-99 காலகட்டத்தில் முதல் தரப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்,. அடுத்த சில ஆண்டுகளில் முதல்தரப்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு தனது திறமையை வளர்த்துக் கொண்டார். மேலும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேகப்பந்து வீச்சு பயிற்சி மையத்தில் இணைந்து பந்துவீச்சு நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தார். இதன்பயனாக 2002-ல் இலங்கை அணித் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

 

இதனால், 2002-ல் தென்னாப்பிரிக்கா சென்ற இலங்கை அணியில் இடம்பிடித்தார். ஆனால் இவர் எந்த போட்டியிலும் களமிறக்கப்படவில்லை. 2003-ல் மேற்கிந்தியத் தீவுகள் சென்ற அணியில் மீண்டும் இடம்பிடித்தார். ஜூன் 27-29, 2003 அன்று இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் இடையே கிங்ஸ்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதன்முதாலாக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இப்போட்டியில் இவர் 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.

 

இதையடுத்து இங்கிலாந்திற்கெதிரான தொடரில் இவர் இடம்பெறவில்லை.இதன்பிறகு இவர் அணியிலிருந்து முழுவதுமாக ஒதுக்கி வைக்கப்பட்டார். இதனால் இவர் உள்ளூர் போட்டிகளிலும், இலங்கை ஏ அணியிலும் விளையாடினார். அணிக்கு மீண்டும் திரும்புவதற்கு அதிக காலம் தேவைப்பட்டது.

 

உள்ளூர் அணியான கண்டுரட்டா அணியில் இவர் விளையாடினார். ருஹுனா அணியை எதிர்த்து ஆடிய போட்டியில் 27 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரிகள் உள்பட 47 ரன்கள் குவித்தார்.மேலும் இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். மேலும் இத்தொடரில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் முதலிடம் பிடித்தார். இதன்காரணமாக ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச இலங்கை அணியில் மீண்டும் இடம் பிடித்தார்.

 

2008-ல் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்த அணியில் இடம்பிடித்து, ஏப்ரல் 15, 2008 அன்று இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் இடையே க்ரோஸ் ஐஸ்லெட்டில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் விளையாடினார். ஒருதின அரங்கில் இவர் ஆடும் முதல் போட்டியான இப்போட்டி மழையின் காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இப்போட்டியில் இவர் 1 விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார்.

 

அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

 

இதையடுத்து இந்திய அணியுடன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரில் இடம் பிடித்துள்ளார்.

 

வெளியான தேதி: 23 ஆகஸ்டு 2008.