CricketArchive

முனாப் படேல்
by CricketArchive


Player:MM Patel

DateLine: 18th August 2008

 

முழுப்பெயர்: முனாப் முசா படேல்

 

பிறப்பு: ஜூலை, 12, 1983, இகார், குஜராத், இந்தியா.

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர்

 

அணியில் வீரரின் நிலை: பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: இந்தியா, ஆசியா லெவன், குஜராத், இந்தியா கிரீன், இந்தியா பிரெசிடென்ட் லெவன், மஹாராஷ்டிரா, மும்பை, ராஜஸ்தான் ராயல்ஸ்,

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: மார்ச் 9-13, 2006, இந்தியா - இங்கிலாந்து இடையே மொஹாலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.
ஒருதினப் போட்டி: ஏப்ரல் 3, 2006 அன்று இந்தியா - இங்கிலாந்து இடையே கோவாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஏப்ரல் 19, 2008 அன்று டெல்லி டேர் டெவில்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே தில்லியில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி.

 

இந்தியா கிரிக்கெட் அணியின் புதுமுக மிதவேகப்பந்துவீச்சாளர். குஜராத்திலுள்ள இகார் என்ற கிராமத்தில் பிறந்தவர். குஜராத் அணியில் இடம்பிடித்து முதல்தரப்போட்டிகளில் விளையாடி வந்தார். அக்காலகட்டத்தில் இவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். 2003-ல் இவரது பந்துவீச்சு முறையை எதோச்சையாக கவனித்த இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே இவரை சென்னையில் உள்ள எம்.ஆர்.எப் கிரிக்கெட் பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைத்தார்.

 

அங்கு இவர் TA.சேகர், டென்னிஸ் லில்லி ஆகியோரிடம் பந்துவீச்சு குறித்து பயிற்சி எடுத்துக் கொண்டார். இப்பயிற்சி அவரது பந்துவீச்சு முறைக்கு மேலும் சிறப்பு சேர்த்தது. அவரது மிதவேகப்பந்து வீச்சு, வேகப்பந்து வீச்சாக மாறியது.

 

இதன்பிறகு இவர் பரோடா மற்றும் குஜராத் அணியில் விளையாடினார். இவரது திறமையைக் கண்ட சச்சின் தெண்டுல்கர், இவர் மீது சிறப்பு கவனம் எடுத்து தனது மும்பை கிரிக்கெட் அணியில் சேர்த்துக் கொண்டார். அதன்பிறகு இவரது முதல்தரப் போட்டிகள் சிறப்பாக இருந்தாலும், காயங்களும் ஏற்ப்ட்டன. இதனால் தேசிய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை.

 

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, மார்ச் 9-13, 2006, இந்தியா - இங்கிலாந்து இடையே மொஹாலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இவர் முதன்முதலாக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். இப்போட்டியில் அற்புதமாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, தான் அணிக்கு தேர்வானது சரிநான் என நிரூபித்தார். அப்போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் வேகப்ந்து வீச்சாளர் ஒருவர் தான் அறிமுகமான முதல் போட்டியில் அதிக (7) விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையும் இவருக்கு கிடைத்தது.

 

இதே அணிக்கெதிராக ஏப்ரல் 3, 2006 அன்று கோவாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டியிலும் அறிமுகமானார். ஒருதினப்போட்டிகளிலும் சிறப்பாகவே பந்துவீசி வருகிறார்.

 

2005-06 காலகட்டங்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கெதிராக இவரது பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. இதுவரை இந்திய அணியில் உள்ள வேகப்பந்து வேதாளங்கள் 87 mph வேகத்தில் பந்து வீசியிருந்தனர். ஆனால் இத்தொடரில் முனாப் படேல் 90 mph வேகத்தில் பந்து வீசி இந்தியாவின் அதிவேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

 

2006-ல், ஜெய்ப்பூரில் இங்கிலாந்திற்கு எதிரான மினி உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் தனது திறமையான பந்துவீச்சால் 8 ஓவர்கள் வீசி, 2 மெய்டன் ஓவர்கள் உள்பட 18 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக முனாப் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில்ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இதில் 15 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதிப்போட்டியில், இவரது அணி வெற்றிவாகை சூடியது.

 

அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த ஒருதின அணியில் இடம்பிடித்து விளையாடினார்.

 

சிறந்த வேகப்பந்து வீச்சாளர். இன்ஸ்விங், அவுட்ஸ்விங், யார்க்கர் வீசுவதில் வல்லவர். சுருங்கச் சொன்னால் இந்திய அணியில் வளர்ந்துவரும் வேகப்பந்து வேங்கை.

 

கடைசியாக திருத்தப்பட்ட தேதி: 18.09.08

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2020 CricketArchive